மீண்டும் தம்பலவத்தை கனிஸ்ட வித்தியாலயம் தேசியமட்டத்திற்கு செல்கின்றது.

(சாம்பகி.)மீண்டும் ஒருமுறை மட்/தம்பலவ்தை க.வி மாகாண மட்டத்தில் ஜொலித்துள்ளது.எமது பாடசாலை மாணவன் ப.டிலக்சன் அவர்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டியில் 17வயதிற்கு கீழ்ப்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் நிகழ்வில் பங்குபற்றி முதலிடம் பெற்று சாதனை படைத்ததுடன் எமது பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.உடற்கல்விப் பாடத்திற்கு வேண்டிய ஆசிரியர் இப் பாடசாலையின் வராலாற்றிலே இல்லாதபோதும்கூட இம்மாணவனை சிறந்தமுறையில் வழிநடத்தி வெற்றிபெறவைத்த அனைத்து ஆசிரியர்கட்கும் குறிப்பாக பிரதி அதிபர் தம்பிபிள்ளை சேர் அவர்களுக்கும் மற்றும் பாடசாலை அதிபர் டில்லி நாதன் அவர்களும் பாராட்டப்படவேண்டியவர்களாகும். இம்மாணவன் தேசிய மட்டத்தில் சாதனை படைத்து தனது பாடசாலையை மற்றவர் கண்ணெடுத்து பார்க்கச்செய்ய வழிசமைக்க சாதனையாளரை வாழ்த்துகின்றோம்...குறிப்பாக வசதிபடைத பாடசாலைகளிலிருந்து வந்த ஏனைய போட்டியாளர்கள் கோலூன்றிப்பாய்வதற்கான நவீன தடியை பயன்படுத்தி கோலூன்றி உயரம்பாய்ந்தபோதும் இம்மாணவன் சாதாரண மூங்கில்கம்பை பயன்படுத்திப்பாய்ந்து அனைவரையும் வென்றது மிகப்பெரிய சாதனைதான்...அத்தோடு கட்டுரை ஆக்கத்தில் தேசிய மட்டத்திற்கு தெரிவான செல்வி விதுசா இம்மாதம் 07ம் திகதி தேசியமட்டப்போட்டிக்காக தலைநகர்நோக்கி செல்லவுள்ளார் அவரையும் இந்தவேளையில் வாழ்த்தி அனுப்புகின்றோம்..தேசியமட்ட சாதனைக்காக.. சாம்பகி....