பகிஸ்கரிப்பை நிறுத்த தீர்மானம் இல்லை;தொடர்ந்தும் பாதிக்கப்படும் பல்கலைக்கழக மாணவர்களின் வாழ்க்கை

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி செயலாளருடன் இடம்பெற்ற சந்திப்பு வெற்றியடைந்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

நேற்றைய தினம் மாலையில் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அதிகாரிகள் பலருடன் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க தலைவர் பேராசிரியர் நிர்மால் ரஞ்ஜித் தேவசிறி தெரிவித்தார். 

பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் மேற்கொள்ளப்படும் பணிபகிஸ்கரிப்பிற்கான காரணங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

எனினும் அடுத்த வாரம் மீண்டும் ஒரு சந்திப்பை மேற்கொள்வதற்கு இருதரப்பினரும் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எப்படியிருப்பினும் பணிபகிஸ்கரிப்பை நிறுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.