
சுடர்ஒளி பத்திரிகையின் ஏற்பாட்டில் தம்பலவத்தை பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் எஸ்.பகீரதன் அவர்களது ஒருங்கிணைப்பில் இவ்வருடம் புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்/தம்பலவத்தை கனிஸ்ட வித்தியாலய மண்டபத்தில் காலை 09.00 மணிமுதல் பி.ப.04.00 மணிவரை இடம்பெறவுள்ளது.இதன்போது மாணவர்களுக்கு மாதிரி வினாப்பத்திரம் ஒன்று வளங்கப்பட்டு அவர்கள் திறமை அளவிடப்படுவதுடன் அவற்றை அன்றய தினமே திருத்தம்செய்து கொடுக்கப்படவுள்ளது. இக்கருத்தரங்கிற்கான வளவாளர்களாக சுடரொளி பத்திரிகையின் வளவாளர்களான திரு.எஸ்.எல்.மன்சூர் ,எம்.சி.எம்.அரூஸ் ஆகியோர் பங்கேற்கவுள்ளார்கள். இக்கருத்தரங்கில் பங்குபற்ற மண்டூர் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் நாவிதன்வெளி பிரதேச மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் இக்கருத்தரங்கை நடாத்துவதற்கு தம்பலவத்தை பாடசாலை அதிபர் திரு.டில்லினாதன் மற்றும் அவரது ஆசிரியர் குழாத்தினர் ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளதுடன் பிரதேசம்சார் கல்வி அபிவிருத்தியில் அர்ப்பணிப்புள்ள நலன்விரும்பிகளின் ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தொடர்களுக்கு: திரு.டில்லிநாதன் 077-4584242
திரு.பகீரதன் 077-6340204