மருத்துவ பீடத்தை தவிர பல்கலைக்கழகங்களின் ஏனைய அனைத்து பீடங்களும் காலவரையறையின்றி இன்று (21/08/2012)) முதல் மூடப்படுவதாக உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வரும் பணி பகிஸ்கரிப்பின் காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதாக அவ் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி முதல் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னதாக பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.இவ்வாறு தொடர்ச்சியாக மாணவர்களது கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருவதாக மாணவர்கள் கவலை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













