வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் விதைநெல் விற்பனை அறிமுக நிகழ்வு




சர்வோதயம் நிறுவனமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ், ஒக்ஸபாம் நிறுவனத்தின் அனுசரனையுடன் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் 'முரண்பாட்டினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி' (EU-ACAP – European Union – Assistance for Conflict Affected People) என்ற தலைப்பின் கீழ் குறித்த கிராமங்களில் உள்ள மக்களுடைய சமூக, பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தினை இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதன் கீழ் விவசாயத்துடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், வாழ்வாதார மேம்பாடு, பொதுச்சுகாதாரம், மற்றும் பால்நிலையும் பாதுகாப்பும் ஆகிய பிரிவுகளின் கீழ் அபிவிருத்தியை நோக்கிய பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச் செயற்பாடுகளில் பிரதானமான அம்சமாக இப் பிரதேச விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் விதைநெல் உற்பத்திச் செய்கையினை ஊக்குவித்து வருகின்றது. இதன்பொருட்டு கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு, தரமான விதை நெல்லினை உற்பத்தி செய்வதற்குரிய வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.






இதன் ஒரு படியான கடந்த சிறுபோக செய்கையின்போது இறுநூறுவில் - பாவற்கொடிச்சேனை, பாம்பர்சேனை – வவுணதீவு ஆகிய இரண்டு விவசாய கண்டங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் ர்யலடநள – யுபசiஉரடவரசந நிறுவனத்துடன் இணைந்து விதைநெல் உற்பத்தி செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் தங்களுடைய உற்பத்தியினை குறித்த நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் அறிமுக நிகழ்வு 09.08.2012 அன்று காலை 09.30 மணிக்கு வவுணதீவு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் திட்ட இணைப்பாளர் மாரிமுத்து பிரகாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் ர்யலடநள – யுபசiஉரடவரசந நிறைவேற்று உத்தியோகத்தர்கள், ஒக்ஸ்பாம் நிறுவன திட்ட முகாமையாளர் திரு.ம.யோகேஸ்வரன், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு ச.சிவலிங்கம், மாவட்ட மற்றும் மாகாண விவசாய திணைக்களங்களில் இருந்து விவசாய உத்தியோகத்தர் செல்வி ம.சிவஞானம், விவசாய போதனாசிரியர் திரு.ரி.கோசலரூபன் மற்றும் விவசாய மேற்பார்வை உத்தியோகத்தர்கள் திரு.சீ.அருமைநாதன், திரு.செ.தனிநாயகம் ஆகியோரும் பிரதேச கமநல அபிவிருத்திக்குமுவின் பிரதிநிதிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான விவசாயிகளும் கலந்துகொண்டனர்

இதன்போது கருத்துத் தெரிவித்த ஒக்ஸ்பாம் நிறுவன திட்ட முகாமையாளர் அவர்கள் எதிர்வரும் காலங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும் எனவும் இதன் காரணத்தினால் விவசாயிகள் தங்களுடைய பிரதேசத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் தாங்களாகவே முன்னின்று செயற்பட வேண்டும் எனவும், உன்னிச்சை வலதுகரை வாய்க்காலினை முழுவதுமாக கொங்கிறீட்ட மூலம் செப்பனிடுவதன் ஊடாக நீரினை மிகவும் உச்ச அளவில் பயன்மிக்கதாக பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டார். பிரதி திட்டமிடல் பணிப்பாளர் அவர்கள் தன்னுடைய கருத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளில் விவசாயிகள் வெறுமனே பயனாளர்களாக மட்டும் இல்லாது பங்காளிகளாக இருக்க வேண்டும் எனவும், மேற்கொள்ளப்படுகின்ற உற்கட்டமைப்பு வசதிகளை தங்களது தலைமுறைகளும் பயன்படுத்தத்தக்கதாக பாதுகாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த விவசாய உத்தியோகத்தர் அவர்கள் சந்தை வாய்ப்புடன் கூடியதாக மேற்கொள்ளப்படும் குறித்த விதை நெல் உற்பத்தி செயற்பாடானது மிகவும் பிரயோசனமானது எனவும் தொடர்ந்து வரும் காலங்களில் இச் செயற்பாட்டினை விஸ்தரிப்பதற்கு தங்களது திணைக்கள உத்தியோகத்தர்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தயாராக உள்ளனர் எனவும் குறிப்பிட்டார். விவசாய மேற்பார்வை உத்தியோகத்தர் அவர்கள் விதை நெல் உற்பத்தியாளர் குழுக்களை அமைத்து அதன் ஊடாக குறித்த செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு உள்ள வாய்ப்புக்கள் தொடர்பில் விவசாயிகளுக்கு தெளிவாக விளக்கியதுடன் அது தொடர்பில் தங்களது திணைக்களம் சார்பில் அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து விவசாயிகள் கருத்துக்தெரிவிக்கின்றபோது தங்களுக்கு இத் திட்டத்தின் ஊடாக கிடைத்த நன்மைகளுக்காக நன்றிகளை தெரிவித்துக்கொண்டதுடன் எதிர்வரும் காலத்தில் மிகவும் சிறப்பான வகையில் அரச திணைக்களங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனை சிறந்த வகையில் பயன்படுத்திக்கொள்வதற்கு தாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக குறிப்பிட்டனர். இறுதியாக திட்ட இணைப்பாளர் அவர்கள் குறித்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தமைக்கு விவசாய திணைக்களங்களில் இருந்து கிடைத்த ஆதரவு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டதுடன் இது இப் பிரதேசத்தின் விவசாயிகள் ஆர்வமுடன் செயற்படுமிடத்து எதிர்வரும் காலத்தில் மிகவும் சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.