அனைவரும் ஏற்கும் அரசியல் தீர்வை தான் த.தே.கூ ஏற்கும் - இரா.சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடாத நாட்டுக்குள் ஒரு அரசியல் தீர்வுக்கு ஆதரவு அளிக்கும். என்று கூறிய கருத்து தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி, இந்த தீர்வை புலன் பெயர்ந்தது வாழும் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?  என்ற கேள்விக்கு கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன் அவர்கள், 
புலன்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் நியாயமான, நிரந்தரமான, நடைமுறைபடுத்தக்கூடிய ஒரு அரசியல் தீர்வினை அவர்கள் எதிர்க்கவில்லை. ஆதலால் நாங்கள் இறுதியில் ஒரு முடிவினை எடுக்கிற போது அவர்களையும் சேர்த்து, அவர்களுடனும் பேசி தான் முடிவினை எடுப்போம். அதே விதமாக எந்த ஒரு அரசியல் தீர்வு வந்தாலும், விசேடமாக வட,கிழக்கை பொறுத்தவரை முஸ்லிம் மக்களுடைய சம்மதம் இல்லாமல், அவர்களுடைய ஆலோசனைகளை பெறாமல், அவர்களுடைய தலைவர்களுடன் பேசாமல் நாங்கள் எந்த முடிவுக்கும் வரமாட்டோம். எங்களுடைய முடிவு எங்களுடைய மக்கள் எல்லோரையும் அரவணைக்கின்ற முடிவாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் தெளிவாக உணருகின்றோம்.  ஆதலால் இவற்றையெல்லாம் மனதில் வைத்து, ஒரு மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இருக்கின்றோம். உங்களுடைய பரிபூரணமான ஆதரவினை இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அளித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு உறுதியான வெற்றியை பெற நீங்கள் உதவ வேண்டும் என கல்முனையில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசார கூட்டத்தில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் உரையாற்றினார். 

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம் தலைமையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனின் ஆவேசமான, எழுச்சி உரையுடன் தொடர்ந்தது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், செல்வராஜா அவர்களும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான, ஸ்ரீதரன், சுமந்திரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் செல்வேந்தன் அவர்களும் உரையாற்றினார்கள்.
அம்பாறை மாவட்ட வேட்பாளர் இராஜேஸ்வரன் அவர்களால் பொன்னாடை போத்தி சம்பந்தன் அவர்களை கௌரவிக்கப்பட்டார். இக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் தேசிய பற்றாளர்கள் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 1 ம் திகதி மாபெரும் எழுச்சி கூட்டம் ஒன்று கல்முனை பிரதான வீதியில் (சிங்கம்ஸ் அருகில்) நடைபெறவுள்ளது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய இளைஞர் ஒன்றிய செயற்பாட்டாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஜெயக்குமார் தெரிவித்தார்.