பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்பாட்டம்

அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரை பேரணி செல்ல முயற்சித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த் தாரைத் தாக்குதல் மற்றும் கண்ணீர்புகை பிரயோகமும் மேற்கொண்டனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டு பல்கலைக்கழகத்தை மீண்டும் திறத்தல், தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியை கைவிடல் உள்ளிட்ட கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.