மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களின் தேர்தல் பிரசுரங்களை இனந்தெரியாத நபர்கள் சிலர் பறித்துச் சென்றுள்ளனர்.இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடத்தில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது தமது கட்சியின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.இதன்போது, முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் அவர்களை அச்சுறுத்தி துண்டுப் பிரசுரங்களை பறித்து சென்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













