விரிவுரையாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது

தமது தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து அமைச்சர் பஷில் ராஜபக்ஸவுடன் நேற்று முன் தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தீர்வுகள் எட்டப்படாத நிலையில் முடிவடைந்ததாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் தெரிவிக்கின்றது.

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் வரை தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது என பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்தின் செயலாளர்  குறிப்பிட்டார்.எனினும் நேற்று முன் தினம் மாலை நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது, தமது பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், விரைவில் தீர்வொன்றினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசாங்க தரப்பினரால் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

எனினும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எண்ணியுள்ளதாக அவர் தெரிவித்தார்.எவ்வாறாயினும் விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்று எண்ணுவதாக விரிவுரையாளர் சம்மேளனத்தின் செயலாளர் குறிப்பிட்டார்.