இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் "ரட்ட விருவோ அமைப்பு" ஆரையம்பதி பிரதேச செயலகத்தில்

(L.Suken)

 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் உழைப்பாளர் சமூகத்தின் நலனோம்பல், பாதுகாப்பு மற்றும் மேம்பாடுகருதி இலங்கை பூராகவும் "ரட்ட விருவோ அமைப்பு" ஆரம்பிக்கப்பட்டது.

இச்செயற்திட்டமானது பிரதேச செயலாளர் ஆட்சி எல்லையை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

 மண்முனைப்பற்றில் ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இச் செயற்திட்டம் 17-08-2012 வெள்ளிக்கிழமை மு.ப 09.30 மணியளவில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளினால் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.