தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்;பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்



பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகள் ஆகியோருக்குமிடையில் நேற்று (10/08/2012) இரவு மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது. இன்றைய நிலையில் எவ்வித சம்பள உயர்வும் வழங்க முடியாதெனவும் ஆனால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதித் தொகையை அதிகரிக்க முடியும் என அரசாங்க தரப்பில் கூறப்பட்டுள்ளது . எனினும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களை விசேட பிரிவினராக மதித்து அரசாங்கம் செயற்படும் என அரசாங்க தரப்பால் மேலும் கூறப்பட்டுள்ளது.எனினும் தமது சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு முடிவெடுக்கும் வரை அரசின் வாக்குறுதிகளை நம்ப முடியாது என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் கலாநிதி டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.அரசின் நிலைப்பாடு குறித்து தமது உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதுவரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.