களுதாவளையில் பெற்றோல் குண்டுவெடிப்புச் சம்பவம்

மட்டக்களப்பு களுதாவளையில் இன்று இரவு 8 மணியளவில் பெற்றோல் குண்டுவெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நாளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரின் சார்பான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரக்கூட்டம் நடைபெற திட்டமிட்ட இடத்திலே இச்சிறியரக குண்டுத்தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் திட்டமிட்டபடி இங்கு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பினரின் தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெறுமென த.ம.வி.பு கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொள்கின்றனர்.