தமிழர்களின் உரிமையையும், சுயாட்சியையும் கோருகின்ற ஒரே கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே. பேரினவாத அரசு திட்டமிட்ட குடியேற்றங்களினால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருகின்றது. இருக்கிற வாக்கினை கூட பயன்படுத்த தவறுகிறது எம்மினம் இது கவலையையும் வேதனையையும் தருகின்றது.
வடக்கு மக்களை விட கிழக்கு மக்கள் தமிழ் தேசியத்தை நேசிக்கின்றார்கள் என்பதை சென்ற பொது தேர்தலில் தெளிவு படுத்தினார்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர வேறு எந்த கட்சியிலும் தமிழர் ஒருவரை தெரிவு செய்யவில்லை. ஆனால் வடக்கில் எமது 4 ஆசனங்கள் பறிபோனது. இந்நிலை கிழக்கு மாகாண சபை தேர்தலில் இடம்பெறக்ககூடாது. என்று கல்முனையில் இன்று "எல்லை காவலன்" ஏகாம்பரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.இராஜேஸ்வரன் அவர்களை ஆதரித்து கல்முனை விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த தேர்தல் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா அவர்கள் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய பேராசியரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளருமான எம்.இராஜேஸ்வரன் அவர்கள், இன்று உங்கள் கைகளில் இருப்பது வாக்கு சீட்டு அல்ல, அது உங்கள் உரிமையை வென்றெடுக்க உங்களிடம் உள்ள ஒரு ஆயுதம். அந்த ஆயுதத்தை தவறாது பாவித்து, தமிழ் தேசியத்தின் கைகளை பலப்படுத்துங்கள். என்று பேசினார். செல்வரெட்ணம்அவர்கள் பேசுகையில், தமிழ் மக்கள் சிந்தித்து எமது உரிமைகளை வென்றெடுக்க, அனைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று பேசினார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமானார் உறுப்பினர் அரியநேத்திரன் அவர்கள் பேசுகையில், சென்ற மாகாண சபையில் ஆட்சியில் இருந்தவர்கள் செய்தவைகளை பட்டியல் இட்டதுடன், இதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகளின் விபரங்களையும் வெளியிட்டார். அதிகளவான மோசடிகளை செய்தவர்களுக்கு இத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினார். இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள்.






















