பெரும்பான்மையினத்தவரால் பிள்ளையார் விக்கிரகம் பலவந்தமாக தகர்த்தெடுக்கப்பட்டுள்ளது

அம்பாறை மாவட்டத்தின் தென்கோடியிலுள்ள பாணமை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலுள்ள பிள்ளையார் சிலையை இன்று  திங்கட்கிழமை அங்குவந்த பெரும்பான்மையினக் குழுவினர் தகர்த்தெடுத்துக் கொண்டு சென்று வேறிடத்தில் வைத்துள்ளனர். ஆலய பரிபாலன சபையின் ஒப்புதலின்றி பலவந்தமாக இப் பிள்ளையார் சிலை பெயர்த்தெடுக்கப்பட்டு கொண்டுசெல்வதையும் குழுமியிருக்கும் மக்களையும் படங்களில் காணலாம்.

 படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா