பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலய தீர்த்தோற்ஷப பெருவிழா

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரசேத்துக்குட்பட்ட பிரசித்திபெற்ற முருகன் ஆலயங்களுள் ஒன்றான பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தீர்த்த உற்சவம் இன்று வெகுவிமர்சையாக இடம்பெற்றது.


கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த உற்சவமானது பத்து தினங்களாக வெகு விமர்சையாக இடம்பெற்றுவந்தது.

காலை விசேட விநாயகர் வழிபாடுடன் கிரியைகள் ஆரம்பமாகி யாகம் மற்றும் மூலமூர்த்திக்கு அபிஷேகம் என்பன இடம்பெற்றன.

ஆலய பிரதம குரு கிரியாஜோதி சிவஸ்ரீ தேவமனோகரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற கொடியேற்ற உற்சவத்தில் தினமும் தம்ப பூசை,வசந்த மண்டப பூசை,சுவாமி உள்வீதி,வெளிவீதி திரு உலா என்பன இடம்பெற்றன.

கதிர்காம தீர்த்த காலத்தில் முதியவராக தோன்றிய முருகப்பெருமான் அங்கு செல்லமுடியாதவர்கள் இங்குவருமாறு கூறி மறைந்ததாக வாய்மொழிக்கதைகள் கூறுகின்றன.

இன்று காலை திருப்பொற்சுண்ணம் இடடிக்கப்பட்டு சுவாமிக்கு விசேட பூசைகள் இடம்பெற்று சுவாமி ஊர்வலமாக சமுத்திரத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

சமுத்திரத்தில் வேலுக்கு விசேட அபிஷேக பூசைகள் செய்யப்பட்டு தீர்த்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

தீர்த்த உற்சவத்தினைத்தொடர்ந்து வீதியுலா வந்த முருகப்பெருமான் ஆலயங்களுக்கு செல்லமுடியாத அடியவர்களுக்கு வீடு தேடிச்சென்று அருட்காட்சி வழங்கினார்.

ஆலயத்தினை சுவாமி வந்தடைந்ததும் ஆலயத்தில் விசேட யாகபூசை இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து கடந்த 10 தினங்களாக பூசிக்கப்பட்ட கும்பம் பக்தி பூர்வமாக அடியார்களின் ஆரோகரா கோசத்துடன் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த தீர்த்த உற்சவத்தில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.