மண்டூர் பாலமுனையில் மகாகும்பாவிஷேகமும் மகாயாகமும்

(சித்தா) மண்டூர் பாலமுனையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆத்ம ஞானபீடத்தின் மகாகும்பாவிஷேகமும் மகாயாகமும் 23-08-2012 வியாழக்கிழமை ஆன்மீகக் குரு ஸ்ரீ புண்ணியரெத்தினம் சுவாமி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இங்கு அமைந்துள்ள பீடமானது மூல குருவாகிய ஸ்ரீ அகத்தியர் மாமகரிஷியின் குரு பரம்பரைக்கென அமைக்கப்பட்டுள்ளதுடன் உலகிலேயே முதன்முதலாக குரு பரம்பரையினருக்காக அமைக்கப்பட்டுள்ளபீடம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு அகத்தியமாமகரிஷி, ஸ்ரீ கண்ணையாயோகிமாமகரிஷி, காயத்திரிசித்தர் பகவான் முருகேசுசுவாமிகள் மாமகரிஷி, ஆன்மீகக் குரு ஸ்ரீ புண்ணியரெத்தினம் சுவாமிகள், மகாமிருத்தியுஞ்ஜெயதேவர் ஆகியோர்களுக்காக தனித்தனியாக ஆலயங்களும் பகவான் முருகேசுசுவாமிகள் மாமகரிஷி அவர்களின் திருப்பாதங்களுக்கும், ஆன்மீகக் குரு ஸ்ரீ புண்ணியரெத்தினம் சுவாமிகளின் திருப்பாதங்களுக்கும் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ் ஆலயங்களுக்கான கலசங்கள் நள்ளிரவு 12.00 மணிக்குபக்தர்களினால் காயத்திரிமந்திரம் உச்சரிக்கப்பட நாதஸ்வரமேளம் முழங்கமிகவும் பக்திபூர்வமாக பிரதிஸ்டை செய்யப்பட்டதுடன் அதிகாலை (வியாழக்கிழமை) 04.00 மணிக்குதிருவுருவப் படங்களும், பதினெட்டு சித்தர்களின் திருவுருவப் படங்களும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டது. இக்கும்பாவிஷேக நிகழ்வில் பெரும் திரளானபக்தர்கள் கலந்து கொண்டதுடன் காலை 10.00 மணிக்கு மகாயாகமும் இடம் பெற்றுதொடர்ந்து பக்கதர்களினால் காயத்திரி மகாமந்திரம் உச்சரிக்கப்பட யாககுண்டம் அணையாமல் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களும் மகாயாகம் இடம்பெற்று சுவாமி அவர்களினால் அருளுபதேசமும் ஆசிர்வாதமும் வழங்கப்பட்டு அன்னதானமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 03-09-2012 திங்கட்கிழமைஅதிகாலை 108 சங்குகளினால் காயத்திசித்தர் பகவான் ஸ்ரீ முருகேசுசுவாமிகளின் திருப்பாதங்களுக்குஆன்மீகக் குரு சிபுண்ணியரெத்தினம் சுவாமிஅவர்களினால் பாலாபிஷேகம் செய்யப்பட்டுகாலை10.00 மணிக்குமகாயாகமும் சுவாமிஅவர்களின் ஆசிர்வாதமும் அருளுபதேசமும் இடம்பெற்றுஅன்னதானமும் வழங்கப்படும்;

.