க.பொ.த. உயர்தரபரீட்சையில் நேற்று நடைபெற்ற இணைந்த கணித பாட
வினாப்பத்திரத்தின் சிக்கலொன்று தொடர்பாக பல முறைப்பாடுகள் பரீட்சைகள்
திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.ஜே.
புஷ்பகுமார தெரிவிததுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அறிக்கையொன்றை
சமர்ப்பிக்குமாறு இவ்வினாப்பத்திரத்த்தை தொகுத்த பேராசிரியர்
கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்."எனினும் வினாப்பத்திரம் I மற்றும் II ஐ கருத்திற்கொள்ளும்போது குறித்த கேள்வி 1.5 புள்ளிகளுக்கு மாத்திரமே உரியது. எனவே முறைப்பாடுகளை அறிக்கை ஏற்றுக்கொண்டால் அவ்வினாவுக்கு விடையளித்த அனைவருக்கும் பூரண புள்ளிகளை வழங்க நாம் தீர்மானித்துள்ளோம்" என அவர் கூறினார்.












