(கிருஸ்ணா)
வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைபரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்தில் 148 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பட்டிருப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.
பட்டிருப்பு கல்வி வலயத்தில் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை 34 மாணவர்கள் இந்த பரீட்சையில் சித்தியடைந்துள்ளதுதாகவும் அவர் தெரிவித்தார்.
கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தை சேர்ந்த மதிவண்ணன் சுவேதா 185 புள்ளிகளைப்பெற்று பட்டிருப்பு கல்வி வலயத்தில் முதலாம் இடத்தினையும் மாவட்ட ரீதியில் 8ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
அத்துடன் களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயம்,களுதாவளை மகாவித்தியாலயம்,கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தலா ஒன்பது மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தில் 8 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் பெரியகல்லாறில் உள்ள ஐந்து பாடசாலைகளில் இருந்து 21 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பட்டிருப்பு வலயத்தில் 138பேர் ஐந்தாம் தர புலமைபரீட்சையில் சித்தியடைந்திருந்ததுடன் இம்முறை 148 பேர் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













