தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இனவாதம் பேசுகின்றன. என்று அமைச்சர் டலஸ் அழக பெரும கூருக்கிறார். இது
என்ன நியாயம்? நீங்கள் எங்களுடைய மக்களை கொன்று குவித்து உலகத்தின்
முன்னாளே குற்றவாளியாக கணிக்கப்பட்டு, அதை எதிர் நோக்கி கொண்டிருக்கிற
நீங்கள், தமிழ்,முஸ்லிம் மக்களுடைய காணிகளை, வளமான இடங்களை அபகரித்து
கொண்டிருக்கிற நீங்கள், அது தான் எங்கள் அபிவிருத்தி என்று கூறி எங்களை
ஏமாற்றி கொண்டிருக்கிற நீங்கள், எங்களுடைய இன அடையாளத்தை, எங்களுக்கு
உரித்தான மத சுதந்திரத்தை, தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் பேசுகிற
தமிழ் மொழியை, சகோதரர்கள் போல் வாழ்கின்ற எங்களை, மொழி,கலை, கலாசார
பண்பாடுகளை, எங்களுடைய இன மத அடையாளங்களை அழிக்க நினைக்கிறவற்றை எங்கள்
மக்களிடம் எடுத்து கூறினால், முஸ்லிம் கட்சிகளும், தமிழ் கட்சியும் இனவாதம்
பேசுகிறது என்று கூறுகிறது இந்த அரசாங்கம். இது நியாயமா?
என்று கல்முனை சேனைகுடியிருப்பில் நடைபெற்ற தேர்தல்
கூட்டத்தில் கேள்வி எழுப்பினர் மாவை.சேனாதிராஜா. கல்முனை மாநகர சபை
உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் (ரோகான்) அவர்களும் கலந்து கொண்டு உணர்ச்சியுடன் உரை ஆற்றினார்.
அங்கு உரையாற்றி அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் (ரோகான்) அவர்கள், சேனை என்பது வீரர்கள், குடியிருப்பு என்பது வசிக்கும் இடம், வீரர்கள் குடியிருக்கும் இடம் இந்த சேனைகுடியிருப்பு. வீரம் விளை நிலத்தில் இருப்பவர்கள் நீங்கள் இத்தேர்தலில் எமக்காக களமாடி உதிர்ந்த எம் மாவீர செல்வங்களுக்கு செய்யும் நன்றிகடனாக இத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த ஒவ்வொருவரும் திட சங்கற்பம் கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார்.

















