வாக்களியுங்கள் - தேர்தல் கடமை

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நாளை சனிக்கிழமை (08-09-2012) நடைபெறவுள்ளது. வாக்களிப்பதற்காக தகுதிபெற்றுள்ளவர்கள் அனைத்து மக்களும் தங்களது வாக்குரிமையை வாக்குச் சீட்டு மூலம் வெளிப்படுத்தி தங்களது (தேர்தல்) ஜனநாயகக் கடமையை நிறைவுசெய்யவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் பெரும்பான்மையாக தமிழ் இனத்தைச் சேர்ந்த மக்கள் இருந்தபோதிலும் இதுவரை நடைபெற்ற அனேக தேர்தல்களில் தமிழ்மக்கள் வாக்களிப்பதைப் புறக்கணித்துவருது இயல்பான விடயமாக இருந்தாலும், இம்முறையாவது அனைத்து மக்களும் அல்லது அதிகளவிலான மக்கள் வாக்களிக்வேண்டிய தருணம்.

ஆகவே தமிழ்மக்களை வாக்களிப்பதற்கு உரிய சந்தர்ப்பங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தி தேர்தலின் தேவைபற்றி எடுத்துக்கூறி உங்களையும் உங்களது உறவினர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

நீங்கள் எந்தக்கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அக்கட்சிக்குரிய குறியீட்டின் முன்னுள்ள வெற்றுக்கூட்டில் மாத்திரம் புள்ளடி (X) இடுங்கள்.
வேறு எங்காவது தற்செயலாகக் கூட கீறுப்பட்டால் வாக்கு நிராகரிக்கப்படும்.ஆகையால் மிகவும் கவனமாக செயற்படுங்கள். காரணம் மிக நீண்ட வாக்குச் சீட்டு இம்முறை உபயோகப்படுத்தப்படுகிறது.

அதற்கு பிறகு கீழே விருப்பு வாக்குக்குரிய இலக்கங்கள் சிறிய எழுத்தில் இருப்பதனால் கவனமாக ஒருவருக்கு என்றால் ஏதாவது ஒரு இலக்கத்துக்கும்(நீங்கள் தெரிவுசெய்யும் சரியானவரின் இலக்கத்தை) இருவரைத் தெரிவு செய்யவேண்டுமென்றால் நீங்கள் தெரிவுசெய்யும் இருவரையும் குறிக்கும் இலக்கங்களுக்கு மேலே புள்ளடியும் அல்லது மூவரைதெரிவு செய்யவேண்டுமெனில் மூன்று இலக்கங்களுக்கும் புள்ளடி இடுங்கள்.


தயவுசெய்து மதுபோதையிலோ அல்லது மனது சங்கடப்பட்டோ அல்லது வேண்டா வெறுப்புடனோ சென்று வாக்களிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். 

அதேபோல் முடிந்தவரை காலை வேளையில் தங்களது வாக்குகளை செலுத்துவதற்கு தயாராகுங்கள். நாளை ஒரே ஒரு நாள் தங்களது மற்றைய வேலைகளை விட வாக்களிப்பதற்கு முக்கியத்துவத்தை அதிகம் கொடுத்து வாக்களியுங்கள். 

மற்றவர்களை விசாரியுங்கள் வாக்களிக்காமல் உங்கள் அயலவர்கள் இருந்தால் அவர்களை வாக்களிக்கச் செல்லுவதற்கு அவர்களை தூண்டுங்கள். சரியான வேட்பாளர்கள் இல்லாவிடினும் ஏதாவது கட்சிக்கு வாக்களிப்பதையாவது செய்யுங்கள். 

தமிழ்உணர்வு இருக்குமேயானால் வாக்களிப்பது நமது கடமையும் உரிமையும் என்று நினைத்துக் கொண்டு வாக்களியுங்கள்.

வெளிநாட்டிலுள்ள இணையத்தள வாசகர்கள் முடிந்தால் தாய்நிலத்தர்வகளிடம் அழைப்பெடுத்து வாக்களிக்கச் சொல்லுங்கள்.

மேலதிக தகவல்கள் இங்கு செல்க தேர்தல் திணைக்களம்  www.slelections.gov.lk

முறைப்பாடுகளை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்கலாம். 07-09-2012 பிற்பகல் 3.00 மணி தொடக்கம் 08-09-2012 பிற்பகல் 5.00 மணிவரையும் தேர்தல்கள் சம்பந்தமான முறைப்பாடுகளை தேர்தல்கள் ஆணையாளருக்கு தெரியப்படுத்தலாம். அதற்கான தொலைபேசி இலக்கங்கள்:
இதுபற்றி மேலதிக தகவல்கள் இங்கு செல்க முறைப்பாடுகளுக்கு