இலங்கையில் இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்பட்டிருந்த சகல அரச
பாடசாலைகளும் நாளை மறுதினம் 03 ம் திகதி திங்கட்கிழமை மீண்டும் மூன்றாம்
தவணை கல்விச் செயற்பாட்டிற்காக திறக்கப்படுகிறது.
இப் பாடசாலைகள் கடந்த ஆகஸ்ட் 03ம் திகதி மூடப்பட்டமை தெரிந்ததே.
இதே வேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில்
பயன்படுத்தப்படவிருக்கும் 20 பாடசாலைகள் திங்களன்று திறக்கப்படமாட்டாது என
கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க ரமழான் நோன்பு விடுமுறைக்காக மூடப்பட்டிருந்த முஸ்லிம்
பாடசாலைகள் கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி மீண்டும் திறக்கப்பட்டு விட்டது.














