(கிருஸ்ணா)
வவுனதீவு பிரதேசத்தில் கடத்திச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நபர் இன்று மாலை வீடு திரும்பியுள்ளதாக வவுனதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது அவர் முரண்பாடான கருத்துக்களை தெரிவிப்பதால் அது தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடா, கொத்தியாபுலவை சேர்ந்த ஒருவரை வெள்ளிவானில் வந்தோர் கடத்திச்சென்றுள்ளது தொடர்பில் வவுனதீவு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.
இன்று பிற்பகல் 1.30மணியளவில் உப்புமடு பிரதேசத்தில் இருந்து துவிச்சக்கரவண்டியில் கொத்தியாபுலவுக்கு வந்துகொண்டிருக்கும்போது கறுப்பு நிறவானில் வந்தோர் குறித்த நபரை கடத்திச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்திச்செல்லப்பட்டவர் கொத்தியாபுலவை சேர்ந்த வாலசுதன் தனபாலன்(22வயது)என்பவர் எனவும் இவர் உப்புமடுவில் திருமணம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் மனைவியின் வீட்டில் இருந்து கொத்தியாபுலவுக்கு செல்லும்போதே கடத்திச்செல்லப்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரின் கடத்தல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வவுனதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
-->