(பிரணி)
கிழக்கு மாகாணத்தில் நேற்று முன் நடை பெற்று முடிந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்மைப்பின் சார்பில் போட்டியிட்ட ஆறு பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப் பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அந்தவகையில்
முன்னாள் கிழக்குக்கு மாகாண சபை உறுப்பினராக விருந்த இரா.துரைரெத்தினம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை), முன்னாள் மக்கள் வங்கி முகாமையாளர் மா.நடராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாணரம்(ஜனா) வர்த்தகர் பிரசன்னா இந்திரகுமார் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசசிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


















