(Suken)
மண்முனைப்பற்று பிரதேசத்தின் பெரிய நூலகமாக கருதப்படும் ஆரையம்பதி பொதுநூலகத்தினை பொறுத்தவரையில் தற்போது மாணவர் முதல் பெரியோர் வரை இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
பத்திரிகை வாசிப்பதற்குரிய இடவசதி போதாமை, மாணவர்களின் புதிய பாடத்திட்டத்திற்கான புத்தகங்கள் குறைவுவாக இருக்கின்றமை, மழை காலங்களில் புத்தகங்களை ஒழுங்கான முறையில் பாதுகாக்க முடியாத நிலை, நீண்ட காலமாக நூலகத்தின் உள் கூரையில் ஏற்பட்ட சிதைவுகள்,சேதங்கள் போன்ற நீண்டநாட்களாக காணப்படும் குறைபாடுகள் தீர்த்துவைக்கப்படாதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பிரதேச சபை அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள்,அதிகாரிகள் உதவமுன்வரவேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
மற்றும் இளம் சமுதாயம் மீது அக்கறை கொண்டவர்கள் தங்களால் முடிந்த உதவியினை ஆரையம்பதி பொது நூலகத்திற்கு உதவிக்கரம் செய்ய முன்வரவேண்டுமென Battinews ஊடாக கேட்டுக்கொள்கிறோம்.
உயர்தர(A/L),சாதாரண தர(O/L) பரீட்சை எழுதிய மாணவர்கள் தங்களிடம் புதிய பாடத்திட்டம் சம்மந்தமான புத்தகங்கள் இருந்தால் நூலக பொறுப்பதிகாரியிடம் புத்தகத்தில் தங்களது பெயர்களை குறிப்பிட்டு கொடுப்பதன் மூலம் ஏனைய மாணவர்களுக்கு அப்புத்தகம் ஒரு முன்னோடியாக இருக்கும்.
மாணவர்களுக்கான பரீட்சைக்குரிய புத்தகங்கள் மிக்க்குறைவாக இருக்கின்றமை இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













