(சித்தா) மண்டூர்பாலமுனையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தின் மகா கும்பாவிஷேகம் 23-08-2012 ஆத்மீக குரு ஸ்ரீ புண்ணியரெத்தினம் சுவாமி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்து 12 நாட்கள் ஜெபதியானம் இடம்பெற்று 03-09-2012 திங்கட்கிழமை சங்காபிஷேகம் இடம்பெற்றது.
02-09-2012 மாலை 4.30 மணிக்கு பக்தர்களினால் தொடர்ச்சியாக காயத்திரி மகா மந்திரம் உச்சரிக்கப்பட்டு நள்ளிரவு 12.00 மணிக்கு 108 வலம்புரிச் சங்குகளினால் பகவான் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமி அவர்களின் திருப்பாதங்களுக்கு அபிசேகம் செய்யப்பட்டது. மறுநாள் 03-09-2012 திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு உலக மக்களின் நன்மை வேண்டி மகா யாகம் ஆன்மீகக் குரு சி.புண்ணியரெத்தினம் சுவாமி அவர்களினால் செய்யப்பட்டது. இம் மகா யாகத்தில் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கு பற்றி சுவாமி அவர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டனர். இங்கு கலந்து கொண்ட பக்தர்களுக்கு சுவாமி அவர்களினால் அருளுபதேசம் ஆற்றப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
போயா தினங்களில் மட்டக்களப்பில் முதலியார் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் காலை 10.00 மணிக்கு பிரார்த்தனையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.00 மணிக்கு களுவாஞ்சிகுடி பழந்தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ யோக ஞான பீடத்தில் பிரார்த்தனை இடம்பெறும். மண்டூர் பாலமுனையில் ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்திலும், கல்முனை, 40ம் கிராமம், தாண்டியடி, ஆனை கட்டியவெளி, திருகோணமலை, அக்கரைப்பற்று, கொழும்பு ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 4.30 மணிக்கும் வியாழக்கிழமைகளில் அனைத்து இடங்களில் 4.00 மணிக்கு பிரார்த்தனையும், அமாவாசை தினங்களில் விடுமுறை நாட்களில் காலை 10.00 மணிக்கும் விடுமுறை அல்லாத நாட்களில் 3.00 மணிக்கு ஸ்ரீ யோக ஞான பீடம், ஸ்ரீ ஆத்ம ஞான பீடம், தாண்டியடி, கல்முனை, 40ம் கிராமம் ஆகிய இடங்களில் மகா யாகம் இடம்













