துறைநீலாவணையில் கட்சி ஆதரவாளர்களிடையே மோதல்

மட்டக்களப்பு துறைநீலாவணையில் த.ம.வி.பு கட்சி ஆதரவாளரான பல்கலைக்கழக மாணவனும் அவனது தாயும் திருகோணமலை தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கடமைபுரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர் மற்றும் அவருடன் சேர்ந்த மூவரால் இன்று பிற்பகல் வேளையில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணையை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது அண்மைய கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னான இரு கட்சிகளுக்கு இடையிலான மோதலாக கருதப்படுகின்றது.