(கிருஸ்ணா)
சோரம் போகின்ற ஒரு தமிழனாக நான் வாழமாட்டேன் என கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் மட்டக்களப்பு நகரிலுள்ள ரெலோ அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டியேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தனக்கு ஏற்பட்டுள்ள அச்ச நிலை, மற்றும் தன்னைப்பற்றி வெளிவந்து கொண்டிருக்கும் அரசாங்கத்துடன் இணைவது தொடர்பான கருத்துக்கள குறித்து விளக்கமளிக்கும் வகையிலேயே அவர் இந்த ஊடகவியலார் மாநாட்டைக் கூட்டியிருந்தார்.
இவ் ஊடகவியலாளர் மாநட்டில், ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கிழக்குமாகாண தேர்தலில் வெற்றி பெற்ற கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இந்திரகுமார் நித்தியானந்தன்(பிரசன்னா) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
65ஆம்ஆண்டு முதல் தமிழ் இனத்துக்குச் செய்யக் கூடிய அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன். நான் பாமர வர்க்கத்தைச் சேர்ந்தவன், படித்தவனுமல்ல, பணக்காரன்னும் அல்ல தமிழ் பண்பாளன் என்பதை ஞாபகமூட்ட விரும்புகிறேன்.
அகவே எதிர்வருகின்ற காலத்திலும் என்னை ஆதரித்து வாக்களித்த தமிழ் இனத்துக்கும் தன்மான தமிழ் இனத்துக்கும் தலை வணங்கி என்பணியைத் தொடர்வேன் சிலர் சொல்வது போன்று சோரம் போகின்ற ஒரு தமிழனாக நான் வாழமாட்டேன்.
பிறந்தேன் வாழ்ந்தேன் இறந்தேன் என்று இல்லாது எமது தமிழ் இனத்துக்கு எமது வாழ் நாளில் எதைச்செய்தேன் என்று காட்டுவதுததான் எனது நோக்கம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எனக்குமுன் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யாத அபிவிருத்தியையும் தொழில் வாய்ப்புக்களையும் பொற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எனது அவா, அந்த வகையில் இலங்கையன் என்ற உணர்வோடு தன்மானத்தமிழனாக வாழ்வேன். அதனால் இந்த அரசாங்கமல்ல எந்த அரசாங்கம் வந்தாலும் தன்மானம் இழந்த தமிழனாக வாழ நான் தயாரில்லை என்பதை இங்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் எனது கருத்தைச் சொல்ல விரும்புகின்றேன்.
நான் சார்ந்த கட்சிக்கும் தமிழ் இனத்துக்கும் அதன் அபிலாசைகளுக்கும் எந்த வகையிலும் அவதூறு ஏற்படும் வகையில் நடக்கமாட்டேன். அத்துடன், அதற்குக் களங்கம் ஏற்படும் வகையல் எந்தமுடிவினையும் எடுக்க மாட்டேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.
இந்தவகையில், என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசாங்கத்திற்கு அழைப்பதற்காக நடைபெற்று வருகின்ற செய்தியை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்களின் அவ் முயற்சிகளுக்கு நான் கூறிய பதில் எனக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்துக்கேற்ப நடப்பேனே தவிர அதற்கு மாறாக நடக்கவே மாட்டேன் என்பதையே ஆகும். இதனை நான் மேலும் நிரூபித்துக் காட்டுவேன்.
அரசியலில் நான்மட்டுமே ஈடுபடுகிறேன். என் குடும்பமல்ல. வெற்றிக் கொண்டாட்டத்தினை நடத்த வேண்டிய நான் வீதி வீதியாக சென்று திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனது குடும்பத்துடன் யாரும் தொடர்புகொள்ளவே பேசவோ வேண்டியது இல்லை. என்னுடன் நேரடியாகப் பேசலாம். என் மக்களின் அபிலாசைகளுக்காகவே நான் போராடுவேன் என்றார்.
இப் பத்திரிகையாளர் மாநட்டில், உங்களுக்கு ஏற்பட்டுள்ள இச்சிக்கலான பிரச்சினை தொடர்பில் கட்சித் தலைமை என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனக் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த வெள்ளிமலை,
இப்பிரச்சினை தொடர்பில் கட்சிக்கு தெரியப்படுத்தியது முதல், எனது பாதுகாப்பு மற்றம் ஏனைய விடயங்கள் குறித்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
அதே நேரம் என்போன்று சக மாகாண சபை உறுப்பினர்கள் பலருக்கும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்தாக அறிகிறேன். அதனால், கட்சியும் அறிவித்திருக்கிறது. எனது பாதுகாப்புக்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருமாறு மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் விண்ணப்பித்திருக்கிறேன் பொலிஸ் மா அதிபரின் அனுமதி கிடைத்ததும் வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கின்றனர்.