(கிருஸ்ணா)
மனித நேய அமைப்புகளின் ஒன்றியம் (சி.எச்.ஏ நிறுவனம்) மட்டக்களப்பு ஸ்தா சொலிடாரிட்டி நிறுவனத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண்கள் மோதலுக்குப்பின்னர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடலைச் நடத்தினர்.
இதற்கான வளவாளராக பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளரான திருமதி நளினி ரெட்ணராஜா கலந்து கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 18 முஸ்லிம், தமிழ் அரச சார்பற்ற நிறுவனங்கள் கலந்து கொண்டன.
ஸ்தா சொலிடாரிட்டி நிறுவனத் தலைவர் வருண் கமல்தாஸ் தனது தலைமையுரையில்,
பெண்கள் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்கள் பல காரணங்களினால் அதிகரித்துச் செல்கின்றன. அவர்கள் தற்பொழுது இடம் பெயர்ந்து வருமானமீட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலைக்கு மோதலின் பின்னர் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பாதுகாப்பை வழங்குவதற்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னைய காலங்களைப் போல் கொழும்பு சீ.எச்.ஏ நிறுவனத்துடன் சேர்ந்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
கலந்துரையாடலையடுத்து நடைபெற்ற கருத்துப் பகிர்வின் போது,
வறுமை, இளவயதுத் திருமணங்கள், குடும்ப உறவு முறைகள் சீர் குலைந்து பெண்கள் வருமான ஈட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை, சொந்தக் கிராமங்களை விட்டு இடம் பெயரந்து பல இடங்களுக்கும் செல்லும் பெண்களில் ஏற்படும் கலாச்சார மாற்றங்கள், ஆண்கள் மது போதைகளுக்கு அடிமையாகிக் கொண்டிருப்பது போன்ற விடயங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டன.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












