சமாதன எழுச்சி ஊர்வலமும் விழாவும்

(காரைதீவு  நிருபர் வி.ரி.சகாதேவராஜா)
சர்வதேச சமாதான தினத்தையொட்டி  சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாறை மாவட்டக்கிளையும் மனித அபிவிருத்தித் தாபனமும் இணைந்து நேற்று அம்பாறைமாவட்டத்தின் காரைதீவில் சமாதன எழுச்சி ஊர்வலத்தையும் விழாவையும் நடாத்தியது.

பேரவைத் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சண்முகா மற்றும் மாவடிப்பள்ளி அல்அஸ்ரப் மாணவர்களும் ஊர்வலத்திலீடுபடுவதையும் சமய தலைவர்களான வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர், சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள், அன்சார் மௌலானா மௌலவி, போதகர் கிறிஸ்தோபர் ஆகியோர் உரையாற்றுவதையும் அதிதிகளான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாள் எம்.எம்.சறூக் மனித அபிவிருத்தித்தாபனத்தின் தலைவி திருமதி.லோகேஸ்வரி சிவப்பிரகாசம் ஆகியோர் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.