மட்டக்களப்பில் உலக குடியிப்பு தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள்

(கிருஸ்ணா)

உலக குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபை நடத்திய உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கும் ஜனசவிய காணி உறுதி வழங்கும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு,தேவநாயகம் மண்டபத்தில் வீடமைப்பு அதிகாரசபை மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன்,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் சிவநாதன்,விவசாய காப்புறுதி திணைக்கள பணிப்பாளர் விநாயகமூர்த்தி உட்பட பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் காணி உறுதியற்றவர்களுக்கா ஜனசவிய காணி உறுதிகளும் வழங்கப்பட்டதுடன் கா.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகளும் இடம்பெற்றன.

இந்த கருத்தரங்குகளை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் நடத்தினர்.