கல்முனை பகவான் பறீ சத்ய சாய் பாபா சமித்தி நிலைய 'பாலவிகாஷ்' குழந்தைகளின் 'சிறுவர் தின விழா' 15.09.2012 பி.ப 2.30 மணிக்கு கல்முனை சமித்தி மண்டபத்தில் நிலையத்தலைவர் வீரவாகு அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. ஓம்காரம் அஷ்டோத்ரம் பஜனையுடன் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின. பாலவிகஷ் நிர்வாகி செல்வநாயகம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நிகழ்த்தப்பட்ட இவ்விழாவில் ஆசிரியஆலோசகர் வரதராஜன் அவர்களும் கிழக்குப் பிராந்திய இணைப்புக்குழுத் தலைவர் இளங்குமரன் அவர்களும் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்ததுடன் பல்வேறு பிரமுகர்களும் கலந்துகொண்டனர். ஸ்லோகம் பாடல்கள் நடனங்கள் நாடகங்கள் பேச்சுக்கள் எனப் பல்வேறு வடிவங்களில் பாலவிகாஷ் மாணவர்கள் தம் திறமையை வெளிக்காட்ட அவற்றைப் பெருந்திரளாக அங்கு வருகை தந்திருந்த அவர்களது பெற்றோர்களும் மற்றும் அனைவரும் பார்த்து ரசித்தனர். அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் விஷேட அடிப்படையின் கீழும் பங்குபற்றுதலுக்காகவும் பரிசில்கள் வழங்கப்பட்டன. மஹா மங்கள ஆரத்தியைத் தொடர்ந்து நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன. இம்மாணவர்களை இத்துணை வழிகாட்டி பயிற்றுவித்த பாலவிகாஷ் குருமார் போற்றுதற்குரியவர்களே.
கல்முனை சத்ய சாய் பாபா நிலைய 'பாலவிகாஷ்' குழந்தைகளின் 'சிறுவர் தின விழா'