இலங்கைத் தமிழர்ஆசிரியர் சங்கத்தின் சர்வதேச ஆசிரியர்தின விழா கடந்த சனிக்கிழமை (13-10-2012) வாகரை மகாவித்தியாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
பிரதம அதிதியான கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எ.எம்.ஈ.போல் அவர்களும், கௌரவ அதிதிகளான கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுபா சக்கரவர்த்தி மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.சாந்தி பவளகாந்தன், சங்கத் தலைவர் வி.ரி.சகாதேவராஜா, பொதுச்செயலாளர் சரா புவனேஸ்வரன், லண்டன் அகிலன் பவுண்டேசன் நிறுவன இலங்கைக்கான பிரதிநிதி வி.ஆர்.மகேந்திரன் ஆகியோர் வாகரை மகா வித்தியாலய பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்துவரப்பட்டர்கள்.
தலைவர் வி.ரி.சகாதேவராஜா தனதுரையில் ஆசிரியர்களின் சேவை அகில இலங்கை சேவையாக (ALL ISLAND SERVICE)மாற்றப்படவேண்டும். அத்துடன் ஆசிரியர்களுக்கான மாதாந்த குறைந்த பட்ச வேதனம் 30 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படல் வேண்டும் என்று கோரினார்.
நிகழ்வில் அதிதிகள் உரையாற்றுகையில் கடந்த 92 வருட காலமாக உயிர்ப்புடன் இயங்கிவரும் தமிழர் ஆசிரியர் சங்கத்தைப் பாராட்டுவதாகக் குறிப்பிட்ட அவர்கள் தற்போது இளம் தலைமைத்துவங்கள் வேகமாகவும் விவேகமாகவும் செயற்பட்டுவருவது குறித்து மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்கள்.
பிரதம அதிதி திரு.போல் அவர்கள் தமது உரையில் ; கிழக்கில் 86 சிறப்பு ஆசிரியர்கள் இம்முறை தெரிவுசெய்யப்பட்டு பிரதீபா விருது வழங்கிகௌரவிக்கப்பட்டார்கள்; மேலும் 85 மகிந்தோதய ஆய்வுகூடங்களும் கிழக்கில் அமைக்கப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்ட அவர் அண்மையில் நியமனமான 13 கல்வி நிருவாக சேவை அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்களென தெரிவத்தார்.
சங்கத்தின் முன்னள் தலைவர்களான மறைந்த எஸ்.கே.வணசிங்க வி.ரி.குமாரசாமி மற்றும் மாவட்ட தலைவர் சி.எம்.குமாரசாமி; ஆகியோரது உருவப்படங்கள் தற்போதைய தலைவர் வி.ரி.சகாதேவராஜா அவர்களால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
முன்னாள் மட்டு.மாவட்ட தலைவர் மு.தயானந்தன் நிதிச் செயலாளர் சின்னத்தம்பிப் போடி ஆகியோர் பாராட்டப்பட்டார்கள். மறைந்த சி.எம்.குமாரசாமியின் பாரியாரும் வரவேற்கப்பட்டார்.
சங்கத்தின் நிருவாகச் செயலாளர் கே.நல்லதம்பி வலய செயலாளர்களான எஸ்.கமலேஸ்வரன், சி.சசிதரன், எஸ்.சிவநடேஸ், செ.மங்களச்சந்திரா, ரி.நிரஞ்சன் மாவட்ட செயலாளர் கு.அருணாசலம், மூதுர் செயலாளர் எஸ்.தேவராஜா உள்ளிட்டோர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
செங்கலடி வாகரை மகா வித்தியாலய ஆசிரியைகளின் ஆசிரியர்களின் கலைநிகழ்ச்சிகள் மேடையேறின.
அதிதிகள் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
சாதனை மாணவர்க்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.போல் அவர்களால் பரிசு வழங்கப்பட்டது. சங்கத்தின் விசேட நூலும் வெளியிடப்பட்டது.
கல்குடா வலய செயலாளர் செ.மங்களச்சந்திரா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
நிகழ்வில் வாகரைப் பிரகடனம் ஒன்றும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் அது Battinews.com இல் பிரசுரிக்கப்படும்.
























