மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் வழமைபோல் இம்முறையும் நவராத்திரி விழா, கல்லூரியின் அதிபர் திரு. பொன் தெய்வேந்திரா தலைமையில் இந்துமாமன்றத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் அனைத்து மாணவர்களும் சேர்ந்து இன மத பேதமின்றி, பங்குபற்றி, இவ்விழாவை கொண்டாடியமை சிறப்பம்சமாகும்.
ஒன்பது நாட்களும் பாடசாலையின் தண்டாயுதபாணி முருகன் ஆலயத்தில் கும்பம் வைக்கப்பட்டு சிறப்பு பூசைகள் நடைபெற்றன.
கோலப்போட்டி, பண்ணிசை, தேவாரப்போட்டிகளும் இடம்பெற்று பரிசில்களும் வழங்கப்பட்டன.
பெரு நிகழ்வாக நேற்று(23-10-2012) நல்லையா ஒன்றுகூடல் மண்டபத்தில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் திரு.மகாலிங்கசிவம் அவர்கள் கலந்து சிறப்பித்து சமயச் சொற்பொழிவாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இறுதி நாளான இன்று ஆயுத பூசை கும்பம் சொரிதலுடன் நிறைவுபெற, குழந்தைகளுக்கு "ஏடுதொடங்கல்" நிகழ்வும் நடைபெற்றது.