செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்திலும் சர்வதேச ஆசிரியர் தினம்

மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகரில் உள்ள மட்./விவேகானந்தா வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தினம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பாடசாலையின் அதிபர் திரு.குணசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ,இந் நிகழ்வில் ஏறாவூர் பற்று உதவி கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி.இளங்கோ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன், ஏறாவூர் பற்று கோட்டக் கல்வி ஆசிரியர் ஆலோசகர் திரு.பற்றிக் அவர்களும், மட்/செங்கலடி மத்திய கல்லூரி அதிபர் திரு.சிறிதரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அத்துடன் சேவகம் நிறுவனத் தலைவர் திரு.எஸ்.நிலாந்தன் அவர்களும், கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்கத் தலைவர்கள் ஆகியோர் அழைப்பு அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.