(கிருஸ்ணா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தில் இளம் தாயையும் அவரின் மகளையும் பாம்பு தீண்டியதில், மகள் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள 40 கொலணி பிரதேசத்தில கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சம்பவம் இரவு தாயான வி.மகேஸ்வரியும் (27 வயது) அவரின் மகளான கிருசாந்தினியும் (10வயது) அருகே தூங்கியுள்ளனர்.
நள்ளிரவு ஏதோ தனது உடம்பில் ஊர்வதை உணர்ந்து எழுந்து பார்த்த குறித்த தாய், பாம்பு தனக்கு தடித்திருப்பதை உணர்ந்து அருகில் உள்ள விஷ வைத்தியரிடம் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்தப் பாம்பு அவரின் மகளுக்கு கடித்துள்ளதை அவரும் அறியவில்லை. கிருசாந்தினிக்கு விஷம் உடலில் பரவி அவர் அவஸ்தைக்கு ஆளான பின்னரே அவரையும் வைத்தியரிடம் கொண்டு சென்றனர்.
எனினும் காலம் கடந்துவிட்டதால் அவரது மகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.