
மட்டக்களப்பு கச்சேரியில் இன்று வாணிவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலதிக அரசாங்க அதிபர் விமலநாதன் தலைமையில் இந்நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவேறியது. இதில் சிறப்பாக தர்சனம் மாணவர்களின் பஜனை நிகழ்வுகளும், வின்சன் பாடசாலை மாணவிகளின் அழகிய நடனங்களும் கண்களை குளிரவைத்ததுடன் மனதையும் அமைதிப்படுத்தியது.
கலந்து கொண்ட மாணவர்கள் அதிகாரிகளால் பாராட்டப்பட்டதுடன் பரிசுகளும் வழங்கி பாராட்டி வைக்கப்பட்டனர். இந்நிகழ்வில் இன மத பேதமின்றி அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டு மகிழ்ச்சியாகக் கொண்டாடி மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகளின் நிழல்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
Seelan..






















