(தீரன்)
வாகரை பால்சேனை மட்.அ.த.க.பாடசாலையின் வாணிவிழா ஊர்வலமும், வாணிவிழா பூசைகளும் மிகவும் சிறப்பானமுறையில் நடைபெற்றது.
இன்றைய(23.10.2012) தினம் பாடசாலையின் அதிபர் திரு.பொன். இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற வாணிவிழா ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள்,ஊர்பெரியார்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பாடசாலையில் இருந்து புறப்பட்ட வாணிவிழா ஊர்வலம் பால்சேனை பெரியசுவாமி ஆலயத்தைச் சென்றடைந்து பொதுமக்களால் வைக்கப்பட்ட கும்பபூசைகளை ஏற்றுக்கொண்டு மீண்டும் பாடசாலையை வந்தடைந்த வாணி விழா ஊர்வலம் விசேட பூசைகளுடன் இனிதே நிறைவுபெற்றது.




















