(கிருஸ்ணா)
மட்டக்களப்பு 231 வது படைப்பிரிவும் பிராந்திய சுகாதார திணைக்களமும் இணைந்து மேற்கொண்ட பாரிய டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு இருதயபுரத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர் சகாயதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 231 வது படைப்பிரிவின் அதிகாரிகள் படையினர் கலந்துகொண்டனர்.
இராணுவத்தின் 63வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் இந்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுசெயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வீடுவீடாகச்சென்று டெங்கு நோய் தாக்கங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டதுடன் டெங்கு பரவும் இடங்கள் படையினரால் சுத்தப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான வா.ரமேஸ்குமார்,ப.முருகதாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இருதயபுரம் விகாரை உட்பட்ட பொதுமக்களின் வீடுகள்,அலுவலகங்கள்,விடுதிகள் இதன்போது அறிவுறுத்தப்பட்டன.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












