அனுராதபுரத்தில் பள்ளிவாயல் எரிக்கப்பட்டதற்கு பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் கண்டனம்

 (கிருஸ்ணா)
 புனித ஹஜ் பெருநாள் தினத்தன்று அநுராதபுரம், மல்வத்தலேனில் உள்ள பள்ளி வாசல்தீயிட்டு எரிக்கப்பட்டமையை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதிஅமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் வன்மையாக கண்டித்துள்ளார்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி இந்நாட்டில் இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒருதாய் மக்கள் என்ற உனர்வில் நாட்டைக்கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடவடிக்கை எடுத்துவரும் போது இவ்வாறு தீயசக்திகள் செயற்படுவது கண்டிக்கத் தக்கவிடயம் ஆகும்.

இதுவரைபலபள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதோடு அநுராதபுர பள்ளிவாசல் எரிக்கப்பட்டது முதல் சம்பவம் அல்ல. இவ்வாறுசெயற்படுவது எம்நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும்.

 எனவே ஜனாதிபதி அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்டவர்களை சட்டத்திற்கு முன்நிறுத்தி, இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு செயற்படுவோருக்கு எதிராகநடவடிக்கை எடுப்பதால் பள்ளிவாசல்களை பாதுகாக்கமுடியும். இவ்வாறு சம்பவங்கள் இன மதரீதியில் மோதல்களையும், இன முரண்பாடுகளையும் ஏற்படுத்தும். எனவே உடனடியாக நிறுத்தப்படுவதோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் பிரதி அமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாதுகாப்புஅமைச்சுச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, வடமத்தியமாகாணமுதல் அமைச்சர், கமநல சேவைகள் வன ஜீவராசி பிரதியமைச்சர் சந்திரசேன ஆகியோர்களை தொடர்புகொண்டு உடனடியாகபள்ளி வாசலை மீண்டும் புனரமைக்கவும்,அச்சமின்றி முஸ்லிம்கள் தங்களது மார்க்கக் கடமைகளை பேணிப்பாதுகாக்கவும், உரியநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சரும், பிரதியமைச்சரும்,வடமாகாண பிரதிபொலிஸ்மா அதிபரும் இது தொடர்பாக உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரபிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ்; தெரிவித்தகாக பிரதி அமைச்சரின் ஊடக செயலாளர் முகம்மட் ஸஜி தெரிவித்தார்.