என் தாய்க்கு துரோகம் செய்ய மாட்டேன் – சந்திரநேரு சந்திரகாந்தன்

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் அவர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நிலவி வரும் முரண்பாடுகள், பதவிக்கவும் என்று நேற்றைய ஞாயிறு பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
நேற்றைய வார வெளியீட்டு பத்திரிகையில் என்னை பற்றியும், எமது கூட்டமைப்பை பற்றியும் உண்மைக்கு புறம்பான வகையில் செய்தியொன்று வெளியிடப்பட்டிருக்கின்றது.
அந்த செய்திக்கு ஒரே பதில்
எங்களது  கட்சியில் பணத்துக்கோ, பதவிக்கோ ஆசைப்படுபவர்கள் அல்ல !
என்னை பற்றி அவதூறாக வெளியிட்ட செய்திக்கு
” என் தாய்க்கு துரோகம் செய்ய மாட்டேன் ” இங்கு தாய் என்று கூறியது, ” எனது இனத்தை ”
இது எம் மக்களுக்கு புரியும். ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் விசமிகளுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருப்பது முரண்பாடுகள் அல்ல, எம் தமிழ் மக்களின் மீதான அதீத பற்றே !
இதனை திரிபு படுத்த வேண்டாம். என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.