பகவான் ஸ்ரீ சத்யசாயி சேவா நிலையங்களின் பாலவிகாஷ் தின நிகழ்வு

(கிருஸ்ணா)

பகவான் ஸ்ரீ சத்யசாயி சேவா நிலையங்களின் கிழக்கு பிராந்திய இணைப்புக்குழு நடத்திய பாலவிகாஷ் தின நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இதனையொட்டி இன்று காலை விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு சாயி சேவா நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு மகஜனக்கல்லூரி மண்டபவம் வரையில் இடம்பெற்றது.

இந்த ஊர்வலத்தில் பாலவிகாஷ் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பகவான் ஸ்ரீ சத்யசாயி சேவா நிலையங்களின் உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டர்.

ஊர்வலமானது மட்டக்களப்பு மகஜனக்கல்லூரி மண்டபத்தினை வந்தடைந்ததும் மண்டபத்தில் பகவான் ஸ்ரீ சத்யசாயி சேவா நிலையங்களின் கிழக்கு பிராந்திய இணைப்புக்குழு தலைவர் எஸ்.இளங்குமரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சாந்தினிதேவி பவளகாந்தன்,சிறப்பு அதிதிகளாக கல்குடா கல்வி வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபாஜினி சக்கரவர்த்தி மற்றும் பகவான் ஸ்ரீ சத்யசாயி சேவா நிலையங்களின் மத்திய அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் என்.பிரேமதாஸன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இதன்போது மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களின் பாலவிகாஸ் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.