வவுனதீவில் சிறுவர் உரிமையினை வலியுறுத்தி பேரணி

(கிருஸ்ணா)

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனதீவு பிரதேச செயலகம் ஏற்பாடுசெய்திருந்த விழிப்புணர்வு ஊர்வலம் தாண்டியடியில் இடம்பெற்றது.

வவுனதீவு பிரதேச செயலாளர் வெ.தவராசா தலைமையில் இந்த ஊர்வலம் நிகழ்வு இடம்பெற்றது.

மூன்று பகுதியாக மாணவர்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக்கோரிய பதாகைகளை தாங்கியவாறு பேரணியாக வந்து தாண்டியடி சந்தியில் விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனதீவு பிரதேசத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.