(மா.சசி)
சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதழியோர் வாரத்தை முன்னிட்டு வவுணதீவுப் பிரதேச செயலகத்தினால் இன்று துளிர்கள் சஞ்சிகை வெளியிடப்பட்டது.
இன்று காலை சிறுவர்தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்ற அதே வேளை மதியம் வவுணதீவுப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இச் சஞ்சிகை வெளியிடு இடம்பெற்றது.சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ரி.மதிராஜ் ஏற்பாட்டில் வவுணதீவுப் பிரதேச செயலாளர் வெ.தவராசா தலைமையில் சஞ்சிகை வெளியிடப்பட்டதுடன் முதியோர் கௌரவிப்பும்,சிறுவர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியிட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் அவர்களுக்கு முதலாவது சஞ்சிகையினை வழங்கி பிரதேச செயலாளர் சஞ்சிகையினை வெளியிட்டு வெளியிட்டு வைத்தார்.
இதே வேளை இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மண்முனை மேற்குப் பிரதேச சுகாதார வைத்திய அதிசாரி சண்முகநாதன் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.சிறிநேசன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் கௌரவிருந்தினாராக மாவட்ட சமூகசேவை அதிகாரி சா.அருள்மொழி சிறுவர் நிதிய பிராந்திய முகாமையாளர் வேர்னாட் பிரகாஸ்,சிறுவர் பாதுகாப்பு நிறுவன திட்ட முகாமையாளர் அன்ரூ மற்றும் வை.எம்.சீ.எ நிறுவனப் பிரதிநிதிகள் பி.பி.டி.ஆர்.ஓ நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.












