போரதீவுப் பற்று பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் அரங்கு


(சித்தா) 
பட்டிருப்பு வலயத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேச பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் அரங்க நிகழ்வு இன்று (02.10.2012) ஆம் திகதி மட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
சிறுவர்களின் கலையாற்றல்களையும், உள்ளார்ந்த திறமைகளையும், வளர்த்தெடப்பதும் மேடைக் கூச்சத்தினையும் இல்லாதொழிக்கும் நோக்கமாகவும் கொண்டு வருடாந்தம் பாடசாலைகளுக்pடையே நடைபெறும் இவ் நிகழ்வுக்கு பட்டிருப்பு வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் தலைமை தாங்கினார். இவ் நிகழ்வில் பங்குபற்றிய சிறுவர் அரங்க நிகழ்வுகள் திறமையடிப்படையில் தெரிவும் செய்யப்பட்டது. இந்த வகையில் முதலாம் இடத்தினை மட்/பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயமும், இரண்டாம் இடத்தினை மட்/திருப்பழுகாமம் விபுலாநந்தா வித்தியாலயமும், மூன்றாம் இடத்தினை மட்/பெரியபோரதீவு பாரதி வித்தியாலயமும் பெற்றுக் கொண்டது,