காக்காச்சிவட்டை விஸ்ணு வித்தியாலய சாதனையாளர் பாராட்டு விழா

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பகுதி பாடசாலையான காக்காச்சிவட்டை விஸ்ணு வித்தியாலயத்தில் இருந்து பல்வேறு சாதனைகளை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் ச.கணேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம்,பிரதிக்கல்விப்பணிப்பாளர் மா.உலகசேகரம்,போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி மு.விமலநாதன்,கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப்பணிப்பாளர் குருகுலசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பாராட்டு விழாவினை பாடசாலை சமூகத்துடன் இணைந்து கிராம மக்கள் விளையாட்டுக்கழகங்கள் ஏற்பாடுசெய்திருந்தன.

இதன்போது மாகாண மட்ட விளையாட்டுப்போட்டில் வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்து தேசிய ரீதியிலான போட்டியில் பங்குபற்றி பாடசாலைக்கு பெருமை தேடிக்கொடுத்த மாணவி அ.துஷேந்தினி மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி த.விதுர்ஸனா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் பாடசாலையின் கல்வி நடவடிக்கையில் பெரும் பங்காற்றிவரும் ஆசிரியர்களும் இதன்போது மக்களால் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.