கிழக்கு மாகாணத்தின் மூதூர் வலயத்தில் உள்ள தி/மூ/அல் ஹைரியா வித்தியாலயம் அதன் போக்கில் மிக அண்மைக் காலமாக விரைவாக வளர்ந்து கொண்டு வருகின்ற மிகச் சிறந்த ஒரு ஆரம்பப் பாடசாலையாக காணப்படுகிறது. இதன் வளர்ச்சிக்கு இப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களினது அர்ப்பணிப்பும். அயராத உழைப்பும் அப் பாடசாலையில் கற்கும் மாணவர்களின் பெற்றோர்களினது ஈடுபாடும் இதற்குக் காரணமாகும் என இப் பாடசாலையின் அதிபர் திருமதி.எம்.கரீம் குறிப்பிடுகிறார்.
இதனை நிரூபிக்கும் வகையில் இப் பாடசாலையில் நடைபெறும் செயற்பாடுகள் சான்று பகிர்கின்றன.
15.11.2012 அன்று மர நடுகை விழாவின் போது சமுர்தி அலுவலர், மற்றும் சிரேஷ்ட ஆசிரியர்யு.து.ஜவாஹிர் மரம் நாட்டுவதைக்காணலாம்
கிண்ணியா வலயத்தில் உள்ள ஒரு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் வகுப்பறையைப்பார்வையிடும் காட்சி.
அதிபர் திருமதி.எம்.கரீம் அவர்களுக்கு மிகச் சிறந்த அதிபருக்கான ஜனாதிபதியின் பிரதீபா பிரபா விருது
மிகச் சிறந்த ஆரம்பப்பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டு அதற்கான வெற்றிக்கிண்ணத்தை வலயக்கல்விப் பணிப்பாளர் யு.விஜயானந்தமூர்த்தி, திருமதி.ஆ.கரீமிடம் வழங்குகிறார்.




.jpg)










