மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் ஒளிவிழா

(கிருஸ்ணா)

ஜேசு கிறிஸ்துவின் பிறப்பின் மாதமாக கருதப்படும் மார்கழி மாதத்தை கிறிஸ்தவ மக்கள் கோலாகலமாக வரவேற்பர்.

பாலன் பிறப்பை சிறப்பிக்கும் வகையில் கிறிஸ்தவ மக்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் இணைந்து கொண்டாடும் நிகழ்வு ஒளிவிழா நிகழ்வாகும்.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்வுகள்ள ஆரம்பமாகியுள்ளன.

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் ஒளிவிழா நிகழ்வு இன்று காலை கோலாகலமாக இடம்பெற்றது.

ஆசிரியர் கலாசாலையின் அதிபர் எஸ்.யோகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அத்துடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மெதடிஸ்த ஆலயத்தின் தந்தை அருட்தந்தை சாமூவேல் சுரேந்திரன் மற்றும் ஞானவிநாயகர் ஆலத்தின் குருக்கள் சிவஸ்ரீ சரவணபவன் குருக்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கலாசாலையின் ஆசிரிய மாணவர்களினால் கரோல் கீதம் இசைக்கப்பட்டதுடன் கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலய மாணவர்களி;ன் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வல் பல்வேறு கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் நிகழ்வு இடம்பெற்ற பகுதிகளில் ஜேசு பாலன் பிறப்பை குறிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரங்கள் மாட்டுத்தொழுவம் என்பன அமைக்கப்பட்டிருந்தன.