மட்டக்களப்பு மாவட்ட உயர் தேசியக் கணக்கியல் டிப்ளோமா (HNDA) பட்டதாரிகள் சங்கத்தின் விசேடகூட்டம் நேற்று (18.11.2012) மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் இடம்பெற்றது.
இவ்விசேட கூட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிப்பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட உயர் தேசியக் கணக்கியல் டிப்ளோமா (HNDA) பட்டதாரிகளை திணைக்களங்களை இணைத்துக் கொள்ளப்படாமல் இருப்பதற்கான காரணங்களையும் இது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இதன்போது ஏனைய மாவட்டங்களில் உயர் தேசியக் கணக்கியல் பட்டதாரிகள் திணைக்களங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படுகின்றபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.
பிரதேச செயலகங்களினால் திணைக்களங்களுக்கு தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட உயர் தேசியக் கணக்கியல் பட்டதாரிகள் நிராகரிக்கப்பட்டதாக பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் ஏன் இவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றனர். இதன் பின்னணியில் அதிகாரிகள் செயற்படுகின்றனரா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
எதிர் வரும் 30 ம் திகதிக்கு முன்னர் சரியான தீர்வு கிடைக்காவிட்'டால் அமைதிப் அமைதியான முறையில் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4


















