மட்டு.ஆசிரியர் கலாசாலையில் மரநடுகை நிகழ்வு

(கிருஸ்ணா)

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸவின் 67வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் சூழல் பாதுகாப்பு பிரிவினரால் ஜனாதிபதியின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் மரநடுகை நிகழ்வு நடத்தப்பட்டது.

ஆசிரியர் கலாசாலையின் சூழல் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாசிரியர் மோகனகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலாசாலையின் அதிபர் எஸ்.யோகராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது சுற்றாடல் வனவளத்துறை அமைச்சின் வன வளத்திணைக்களத்தின் மூலம் வழங்கப்பட்ட 100 மரங்கள் ஆசிரியர் கலாசாலையில் நடப்பட்டது.

தேசத்துக்கு நிழல் தேசிய திட்டத்தின் கீழ் இந்த மரங்கள் விநியோகிக்கப்பட்டதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட வனபாரிபாலன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கலாசாலையின் விரிவுரையாளர்கள்,ஆசிரிய மாணவர்கள்,ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.