உ.உதயகாந்த்
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் கலை இலக்கிய திறமைகளை வெளிக்கொனரும் முகமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கடந்த 26.11.2012ஆம் திகதியன்று பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வானது பிரதேச செயலகத்தின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு வே.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது . இன் நிகழ்வில் அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஜெயாகர் அவர்களும் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் குணாளன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களை கௌரவிக்கும் முகமாக பரிசில்களும் வழங்கிவைத்தார்கள்.












